விருப்ப மாறுதல் கலந்தாய்வு 167 போலீசாருக்கு இடமாற்றம்
சேலம் :ஒரே போலீஸ் ஸ்டேஷனில், 3 ஆண்டு தொடர்ந்து பணிபுரியும், சிறப்பு எஸ்.ஐ., ஏட்டு, முதல்நிலை போலீசார் இடமாற்றப்படுவர். அதன்படி சேலம் மாவட்ட போலீஸ் துறையில், 3 ஆண்டு பணி முடித்தவர்கள், மதுவிலக்கு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவில், ஓராண்டு பணி முடித்த போலீசார், விருப்ப இடமாறுதல் கேட்டும், எஸ்.பி., கவுதம் கோயலிடம் விண்ணப்பங்களை வழங்கியிருந்தனர். அதன்படி விருப்ப மாறுதல் கலந்தாய்வு முகாம், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், 20 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உள்பட, 90 போலீசாருக்கும், மதுவிலக்கு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவில், 77 பேருக்கும் என, 167 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.