உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இலவசமாக பார்க்கலாம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இலவசமாக பார்க்கலாம்

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த அக்டோபரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் சேலம் மாவட்டம் வாழப்பா-டியில் உள்ள, சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில், இன்று முதல் வரும், 26 வரை, போட்டிகள் நடக்க உள்ளன. அதன்படி இன்று தமிழகம் - சண்டிகர் அணிகள் மோதுகின்றன. காலை, 9:30 முதல், மாலை, 4:45 மணி வரை போட்டி நடக்கிறது. தினமும், 90 ஓவர்கள் வீசப்படும். இந்த போட்டியை, ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என, சேலம் கிரிக்கெட் சங்க செயலர் பாபுகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ