உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் பற்றாக்குறை புது தொட்டி அவசியம்

குடிநீர் பற்றாக்குறை புது தொட்டி அவசியம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சி விநாயகர் நகரில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு, 10,000 லிட்டர் கொள்ளளவில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அதன் மேற்புறம் உள்ள மூடி சேதமடைந்துள்ளது.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'வீடுகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், 20 ஆண்டுக்கு முன் கட்டிய சிறு தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் தொட்டியின் மேற்புற மூடி உடைந்ததால் மழைநீர், குடிநீரில் கலக்கும் அபாயம் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப, பெரிய தொட்டி கட்ட வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ