மேலும் செய்திகள்
பைக்குகள் மோதல் ஒருவர் பலி: இருவர் காயம்
10-Sep-2025
சேலம், சேலம், சித்தனுார் பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன், 45, மனைவி கலைவாணி, 41. இவர்கள் இருவரும் கடந்த, 19ல் வெளியே சென்று விட்டு, சித்தனுாருக்கு டி.வி.எஸ். எக்ஸ்.எல்., மொபட்டில் இரவு, 11:00 மணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மாருதி ஷிப்ட் கார் மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்,இந்நிலையில் நேற்று காலை கலைவாணி உயிரிழந்தார். மொபட் மீது, கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது நரசோதிப்பட்டியை சேர்ந்த சபரீஸ்குமார், 34, என்பது தெரியவந்தது. இவர் சேலம் ரயில்வே கோட்டத்தில், சீனியர் டிவிஷனல் ஆப்ரேட்டிங் மேலாளராக பணிபுரிகிறார். இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
10-Sep-2025