மேலும் செய்திகள்
மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது
28-Oct-2025
மேட்டூர் :கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, கள்ளக்காதலன், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.சேலம் மாவட்டம் காரிப்பட்டி, கலையூரை சேர்ந்தவர் ஜெயபால், 41. இவரது மனைவி திவ்யா, 37. இவர்கள் இடையே குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் திவ்யாவுக்கு, அப்பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மனைவி, கள்ளக்காதலன் ஆகியோர், ஜெயபாலை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும், நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு உள்ளது. இரு தரப்பினரும் மேட்டூர் நீதிமன்றத்தில் நிபந்தனையின்பேரில் கையெழுத்திட்டு வருகின்றனர்.கடந்த, 3 காலை, 11:00 மணிக்கு கையெழுத்திட்டு விட்டு, மேட்டூர், 4 ரோடு அருகே ஜெயபால் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த திவ்யா, மாமியார் ராஜாமணி, கள்ளக்காதலன் பிரதீப் ஆகியோர், ஜெயபாலை மறித்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபோன்று அடிக்கடி நடப்பதாக கூறி ஜெயபால், நேற்று அளித்த புகார்படி, மேட்டூர் போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Oct-2025