நிவாரண நிதி கிடைக்குமா?
சேலம், ஓமலுார் சர்க்கரை செட்டிபட்டி, 4 கால் பாலத்தை சேர்ந்த மூதாட்டி லட்சுமி, 60. இவர், நேற்று முன்தினம் வீட்டருகே வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு தீண்டியது. உடனடியாக ஒமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தபோது, இறந்து விட்டார். அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று காலை, 10:47 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன், மறியல் போராட்டத்துக்கு முயன்றனர்.அப்போது, ஓமலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை உடனடியாக அளித்திருந்தால், லட்சுமி உயிர் பிழைத்திருப்பார் என, ஆதங்கத்துடன் கூறினர். பின், போலீசார் வழங்கிய அறிவுரையை ஏற்று, மறியலை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், இறந்த மூதாட்டிக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி அரசுக்கு முறையிட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல்