மேலும் செய்திகள்
பைக் மோதி காவலாளி பலி
02-Oct-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு புறநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணியர் பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி, பிரசவ வார்டு, சித்தா பிரிவு, ஆய்வகம், ஸ்கேன் பரிசோதனை, வட்டார அலுவலகம், பணியாளர் குடியிருப்பு ஆகியவை உள்ளன.தினமும், 100க்கும் மேற்பட்டோர், பல்வேறு தேவைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். அங்கு குடிநீர் தட்-டுப்பாடு உள்ளதால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.மக்கள், நோயாளிகள், பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீரை தேக்கி வைத்து பயன்படுத்த தொட்டி இல்லை. இதனால், ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட, மருத்துவர்கள், பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
02-Oct-2024