உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலெக்டர் அலுவலகத்துக்கு கஞ்சாவுடன் வந்த பெண்

கலெக்டர் அலுவலகத்துக்கு கஞ்சாவுடன் வந்த பெண்

சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு, பெண் ஒருவர் வந்த போது அவரிடம் இருந்த மஞ்சப்பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து உடனடியாக பெண்ணை, டவுன் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கெங்கவல்லியை சேர்ந்த கணேசன் மனைவி முத்துலட்சுமி, 51, என்பதும், கணேசன் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருவது தெரிந்தது. அவர் மாற்றுத்திறனாளியாக இருப்பதால், நிதியுதவி கேட்டு மனு அளிக்க வந்தது தெரியவந்துள்ளது. முத்துலட்சுமி மூலப்புதுாரில் துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். இவருக்கு தோல் வியாதி இருப்பதால், தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில் தெரிந்த நபர் ஒருவர், நாட்டு மருந்து என்று கூறி பொட்டலத்தை கொடுத்துள்ளார். அதில் உள்ள இலையை அரைத்து, கைகளில் தடவினால் தோல் வியாதி போய்விடும் என, முத்துலட்சுமி தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக முத்துலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ