உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாட்டர் ஹீட்டர் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் பலி

வாட்டர் ஹீட்டர் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் பலி

சேலம், ஓமலுார், சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி வீராசாமி. இவரது மனைவி கோமதி, 41. இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன், 10 நாட்களுக்கு முன், சேலம், கிச்சிப்பாளையம், காந்தி மகான் தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். இந்நிலையில் கோமதி, சமையல் வேலைக்கு செல்ல, நேற்று காலை, 6:30 மணிக்கு சுடு நீர் வைக்க, 'வாட்டர் ஹீட்டர்' சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட கோமதியை, மகன்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்தது தெரிய வந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை