விபத்தால் விழுந்த பெண் லாரி ஏறி கை நசுங்கியது
மேட்டூர் :மேட்டூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ராஜா மனைவி ருக்மணி, 45. கூலித்தொழிலாளி. நேற்று காலை, 9:00 மணிக்கு, 'எக்ஸ்.எல்.,' மொபட்டை ராஜா ஓட்டிச்சென்றார். ருக்மணி அமர்ந்திருந்தார். மேட்டூர், 4 ரோடு அடுத்த டான்சி குடியிருப்பு அருகே, இடது பக்கம் சென்றபோது, அந்த வழியே வந்த, 'பல்கர்' லாரி, மொபட் மீது மோதியது. இதில் தம்பதியர், தடுமாறி விழுந்தனர். அப்போது பல்கர் லாரி டயர், ருக்மணியின் இடது கை மீது ஏறியது. கை நசுங்கிய நிலையில், ருக்மணி, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.