திருவிளக்கு பூஜை பங்கேற்ற பெண்கள்
இடைப்பாடி, நவராத்திரி விழாவை முன்னிட்டு, இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.இடைப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியில் உள்ளது சின்னமாரியம்மன் கோவில். ஆண்டுதோறும் நவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்தாண்டு நவராத்திரி கடந்த, 22 முதல் நடந்து வருகிறது. நவராத்திரியின், 8ம் நாளான நேற்று சின்னமாரியம்மன் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.