உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டடம் சேதம் மகளிர் குழு அவதி

கட்டடம் சேதம் மகளிர் குழு அவதி

பனமரத்துப்பட்டி :கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், 40 மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன. ஊராட்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடம் உள்ளது. அதை மகளிர் குழுவினர் அலுவலகமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் கட்டட மேற்கூரை சேதமடைந்து உள்ளதால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நுாலக கட்டடத்தின் ஒரு குறுகிய இடத்தில் மகளிர் குழுவினர் அமர்ந்து பணிகளை மேற்கொள்வதால், சிரமத்துக்கு ஆளாகின்றனர். குழு உறுப்பினர்கள் வந்து, அமர இடமின்றி வெளியே நிற்கின்றனர். அதனால் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தை புதுப்பித்து தர வேண்டும் என, மகளிர் குழுவினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை