மேலும் செய்திகள்
கல்லுாரி பஸ் ஓட்டுநர் சாலை விபத்தில் பலி
23-Dec-2025
வாழப்பாடி:சேலம், கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி, 39. அடிம-லைப்பட்டியை சேர்ந்தவர்கள் செந்தில், 49, சின்னராஜ், 53. இவர்கள் நேற்று, கூலி வேலைக்கு, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் புறப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல் கந்தசாமி ஓட்-டினார்.காலை, 9:00 மணிக்கு, வாழப்பாடி, திருமனுார், புளியந்தோப்பு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிரே, சதீஷ் என்பவர் வேக-மாக ஓட்டி வந்த, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்குடன், நேருக்கு நேர் மோதியது. இதில் செந்தில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கந்தசாமி, சின்னராஜ், சதீஷ், சதீஷின் பைக்கில் வந்த இளைய-ராஜா படுகாயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து செந்தில் மனைவி நாதாயி அளித்த புகார்படி, வாழப்பாடி போலீசார் விசா-ரிக்கின்றனர்.
23-Dec-2025