உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளி மர்மச்சாவு உறவினர்கள் போராட்டம்

தொழிலாளி மர்மச்சாவு உறவினர்கள் போராட்டம்

சேலம்: சேலம், பள்ளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக வேலை பார்த்தவர் செல்வம், 55. சின்னப்பம்பட்டி, கொண்டக்காரனுாரை சேர்ந்த இவருக்கு திரும-ணமாகி மனைவி, 4 மகள்கள் உள்ளனர்.நேற்று காலை பணிக்கு வந்த செல்வம், மதியம், 2:00 மணிக்கு மயங்கி கிடப்பதாக, நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தகவல் கொடுக்கவே, அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் வந்து பார்த்தனர். அப்போது செல்வம் இறந்தது தெரியவந்தது. மேலும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பள்ளப்பட்டி போலீசார், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சமாதானம் அடைந்தனர். பின் செல்வம் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அவர் எப்-படி இறந்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி