உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 24ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் 18க்குள் புகாரும் அனுப்பலாம்

24ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் 18க்குள் புகாரும் அனுப்பலாம்

24ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்18க்குள் புகாரும் அனுப்பலாம்சேலம், டிச. 8-சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் குறைதீர் கூட்டம், வரும், 24 ல் நடக்க உள்ளது.இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை: சேலம் தலைமை அஞ்சலக கட்டடம், 3ம் தளத்தில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், டிச., 24 மதியம், 3:00 மணிக்கு, கோட்ட அளவில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.தபால் குறித்த குறைகள் இருப்பின், புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரிலோ அல்லது 'முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் - 636 001' என்ற முகவரிக்கு, வரும், 18க்கு முன் கிடைக்கும்படி அனுப்பலாம். அஞ்சல் உறை மீது, 'DAK ADALAT CASE' என குறிப்பிடவும்.மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் உள்ளிட்ட புகார்களை அனுப்பிய தேதி, முகவரி, பதிவு அஞ்சல் எண் உள்ளிட்ட முழு விபரங்களுடன் அனுப்பி வைக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை