உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விரும்பிய படிப்புகளை தெரிந்துகொண்டு கல்லுாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்

விரும்பிய படிப்புகளை தெரிந்துகொண்டு கல்லுாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்

சேலம்: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், சேலம், இரும்பாலை அரசு மருத்துவ கல்லுாரி கூட்டரங்கில், என் கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: பள்ளி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவியர், உயர்கல்-வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து, கல்வியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் கூறியிருப்பது, மாண-வர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு பேருதவியாக இருக்கும். வாழ்க்கையில் எளிதாக இருப்பதை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், அவர்களுக்கு வெற்றி பெரிதாக இருக்காது. சிறிது கடினமாக இருந்தாலும், அப்பாதையை தேர்ந்தெடுத்தால் சமுதாயத்தில் இருக்கும் வேலை, பொருளாதார வாய்ப்புகளை அறிந்து வாழ்வில் முன்னேறலாம். விருப்பமுள்ள படிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு, அதற்குரிய கல்லுாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை