உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எருதாட்டம் நடக்காததால்இளைஞர்கள் ஏமாற்றம்

எருதாட்டம் நடக்காததால்இளைஞர்கள் ஏமாற்றம்

தாரமங்கலம் தாரமங்கலம் கே.ஆர்.தோப்பூர், கண்ணனுார் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி கம்பம் நடும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி எருதாட்டம் நடப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு சிலரை காளைகள் முட்டியதால், விழா குழுவினர் இந்தாண்டு கோவில் காளைக்கு பொட்டு வைத்து, கோவிலை சுற்றிவர மட்டும், தாரமங்கலம் போலீசில் அனுமதி பெற்றனர்.ஆனால் இளைஞர்கள், எருதாட்டத்துக்கு காளைகளை பிடித்து வந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், எருதாட்டத்துக்கு அனுமதிக்கவில்லை. இதனால் மாலை, 4:00 மணிக்கு கோவில் காளை அழைத்து வரப்பட்டு பொட்டு வைத்து கோவிலை, 3 முறை சுற்றிவந்து நிறைவு செய்தனர். எருதாட்டம் நடக்காததால், இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை