உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சவ ஊர்வல வெடி விபத்து வாலிபர் பரிதாப பலி

சவ ஊர்வல வெடி விபத்து வாலிபர் பரிதாப பலி

சேலம், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தும்பல் கிராமத்தை சேர்ந்த மாது, 60, உடல்நல குறைவால் கடந்த மே, 16ல் இறந்துள்ளார். மறுநாள் நடந்த அவரது சவ ஊர்வலத்தின் போது, வாண வெடி வெடிக்கப்பட்டது. அதில் ஒரு வெடி, மேல்நோக்கி செல்லாமல், கீழ்நோக்கி வந்து, வெடி வைத்திருந்த சாக்கு மூட்டைக்குள் நுழைந்து வெடித்தது. இதில், மூட்டைக்கு அருகில் இருந்த சதிஷ், 28, என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சூர்யா, 21, பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, 16 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சூர்யா இறந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !