உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மிரட்டிய இருவர் கைது

மிரட்டிய இருவர் கைது

காரைக்குடி: சகோதரரின் குடும்ப விஷயத்தை பத்திரிகையில் வெளியிடுவதாக கூறி மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.காரைக்குடி கழனிவாசல், ஜீவா நகரை சேர்ந்தவர் அல்லாபாக்ஸ்.கடந்த 9ம் தேதி இவரிடம், காரில் வந்த மூவர் உன் அண்ணன் மகன் அப்துல்லாவிற்கும், எங்களது உறவுக்கார பெண் ஒருவருடன் ஏற்பட்டுள்ள தொடர்பு விஷயமாக பேச வந்துள்ளோம் என்றனர். அப்துல்லா ஊரில் இல்லை, இதுபற்றி என்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என அல்லாபாக்ஸ் கூறினார். அதற்கு மூவரும் காரில் பத்திரிகையாளர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் விபரத்தை கூறி செய்தி வெளியிடுவோம் எனக் கூறி மிரட்டியுள்ளனர். அல்லாபாக்ஸ் கொடுத்த புகாரில், காரைக்குடி அழகப்பன் அம்பலம் தெருவை சேர்ந்த பசீர்முகமது (27), அப்பகுதியை சேர்ந்த சகுபர்சாதிக்கை (29) எஸ்.ஐ., ராமர் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ