உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் இ--சேவை மையத்தில் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை

திருப்புவனம் இ--சேவை மையத்தில் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை

திருப்புவனம்: திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு இசேவை மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் அரசு இசேவை மையம் செயல்பட்டு வருகிறது. தினசரி சான்றுகள் பெற அரசு இசேவை மையத்திற்கு மக்கள் வருகின்றனர்.ஒரு சான்று பெற அரசு அறுபது ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் குறிப்பிட்ட நாட்களில் சான்று இணையதளம் வாயிலாக வழங்கப்படும்.18 வகையான சான்றுகளை இசேவை மையத்தில் விண்ணப்பித்து பெறலாம். திருப்புவனம் இசேவை மையத்தில் ஒரு சான்றுக்கு அறுபது ரூபாய்க்கு பதிலாக 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இ சேவை மையத்தினுள் வெளி நபரை அனுமதிக்க கூடாது என்பது விதி, ஆனால் மையத்தினுள் சம்பந்தமில்லாதவர்கள் அமர்ந்து கொண்டு சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களை அலைக் கழிப்பதுடன் கூடுதலாக பணம் கேட்டு கெடுபிடி செய்வதாகவும் கூறுகின்றனர்.தாசில்தார் விஜயகுமாரிடம் கேட்ட போது இனி வெளிநபர்கள் உள்ளே செல்லாத வண்ணம் தடுப்பு வைக்கப்படும், கூடுதல் கட்டணம் கேட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ