உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மோசடி வழக்கில் கைது  

மோசடி வழக்கில் கைது  

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரை சேர்ந்தவர் வேங்கை காளிதாஸ் 44. இவர் மீது சிவகங்கை, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 8 க்கும் மேற்பட்ட மோசடி வழக்கு உள்ளன. புதுச்சேரியில் இவர் மீதான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கையில் மட்டுமே இவர் மீது எட்டு மோசடி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 5 ஆண்டாக சிவகங்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 வில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். எட்டு வழக்கின் மீதும் பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் செல்வம் உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மன்னவன், சிறப்பு எஸ்.ஐ., மதி அடங்கிய குழுவினர் தேடி வந்த நிலையில், பிள்ளையார்பட்டியில் வேங்கை காளிதாசை கைது செய்தனர். //


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ