சதுரங்க பயிற்சி
சிவகங்கை,ஜூன் 12- தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிந்தனைத் திறனை வளர்க்க சதுரங்க பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். பயிற்சியாளர் சிவசங்கரி மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் சதுரங்க காய்களின் நகர்வு குறித்து பயிற்சி அளித்தார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.