உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தென்னை வாரிய தலைவர் விருப்பம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தென்னை வாரிய தலைவர் விருப்பம்

காரைக்குடி: காரைக்குடி ஸ்ரீ ராம் நகர் பைபாஸ் அருகே பிரதமர் மருந்தகம் திறப்பு விழா நடந்தது. தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் சுப. நாகராஜன் மருந்தகத்தை திறந்து வைத்தார். அவரிடம் பா.ஜ., சிவகங்கை மாவட்ட தலைவர் பாண்டித்துரை நீரா பானத்தை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் சுப. நாகராஜன் கூறியதாவது:தென்னை விவசாயத்தில் கேரளா முதன்மையில் உள்ளதாக கருத்து உள்ளது. ஆனால் தென்னை விவசாயத்தில், முதலாவது கர்நாடகா, 2 வது இடத்தில் தமிழ்நாடு, 3வது தான் கேரளா உள்ளது. தென்னை விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள், பயிற்சிகளை அறிவித்து வருகிறார். தென்னையில் இருந்து 600 விதமான மதிப்புக் கூட்டும் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.தேங்காய்க்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயிகளுக்கு மத்திய அரசின் சார்பில் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. உடலுக்கு நன்மை வழங்கக்கூடிய தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி