உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி சங்க விழா

கல்லுாரி சங்க விழா

சிவகங்கை, : பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் ஒப்பனை தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பில் சங்கத் தொடக்க விழா நடந்தது. பேராசிரியர் காயத்ரி வரவேற்றார். முதல்வர் விசுமதி வாழ்த்தி பேசினார். கிருபா அகாடமிக் நிறுவனர் ஒசானா கலந்துகொண்டார். பேராசிரியர் அபிதா நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக முதலுதவி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. டாக்டர் பிரதீப் முதலுதவி குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் ஏற்படுத்தினார். வணிகவியல் துறை சார்பாக மன்ற துவக்க விழா நடந்தது. தாளாளர் அசோக் தலைமை வகித்தார். மன்னர் துரைசிங்கம் கலை கல்லுாரி வணிகவியல் துறை பேராசிரியர் வெங்கடேசன் நிதி கல்வியறிவு திறன்கள் தலைப்பில் பேசினார். மாணவி சீதாலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ