உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகையில் தண்ணீர் திறக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

வைகையில் தண்ணீர் திறக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மானாமதுரை: மானாமதுரை விவசாயத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், மாலதி, மேலாளர் விஜயகுமார் வரவேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் இன்னும் நிரம்பாமல் உள்ளதால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.பி.டி.ஓ., லுாயிஸ் ஜோசப் பிரகாஷ்: நடவடிக்கை எடுக்கப்படும்.துணைத் தலைவர் முத்துசாமி தி.மு.க.,: பெரியகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் உள்ள பயனற்ற கட்டடங்களையும், அதற்கு அருகில் பயன்படாமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், தெக்கூரில் பயன்பாட்டில் இல்லாத சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டிகளையும் அகற்ற வேண்டும்.பி.டி.ஓ.,: நடவடிக்கை எடுக்கப்படும்.அண்ணாத்துரை தி.மு.க.,: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ., தமிழரசி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் பொது நிதியிலிருந்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.டி.ஓ.,: புதிய கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதிய நிதி ஆதாரம் வந்தவுடன் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். முருகேசன் இ.கம்யூ.,: விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் எல்.எல்.ஆர்., ரக நெல் விதைகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கீழப்பசலையில் உள்ள பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் மாரிமுத்து, கருப்பையா, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை