மேலும் செய்திகள்
சிவன் கோவில் விழாவில் திருக்கல்யாண உற்சவம்
27-Feb-2025
சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருடாபிேஷக விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் வருடாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 முதல் மதியம்12:00 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சுதர்சன ேஹாமம், திருமஞ்சனம், திருவாரதன பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கோயிலில் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு, பெருமாளை தரிசித்தனர். நேற்று மாலை குதிரை வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் தேரோடும் வீதிகளில் நகர்வலம் வந்தார். கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து ஏற்பாடுகளை செய்தார். வருடாபிேஷகபூஜைகளை கோயில் பட்டாச்சார்யா முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோபால் செய்திருந்தனர்.
27-Feb-2025