உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மானாவாரி பயிர்களை பாதுகாத்திடசிறப்பு ஊக்கத்திட்டங்களை அமல்படுத்த கோரி கலெக்டர் அலுவலகம் முன் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கோபால், இந்திய கம்யூ., கட்சி மாவட்ட துணை செயலாளர் மருது, விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் முருகேசன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் குணாளன், சங்கையா, மாதவன், சின்ன கருப்பு, கல்லல் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வெங்கட், தொழிற்சங்க செயலாளர் ராஜா சகாயம், மாதர் சங்க பொறுப்பாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கோரிக்கை மனுக்களை குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை