மேலும் செய்திகள்
அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதம்
20-Aug-2024
பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க அறிவுரை
19-Aug-2024
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் பருவநிலை மாற்றத்தால் ஆடிப்பட்டத்தில் விதைத்த பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகிறது.ஆடிப்பட்டம் தேடி விதை, ஆடியில் விதை போட்டால் கார்த்திகையில் காய் காய்க்கும். ஆடி வரிசை தேடி வரும், ஆடி விதைப்பு ஆவணி நடவு என்ற முதுமொழிக்களுக்கேற்ப விவசாயிகள் ஆடி பிறந்தவுடன் உழவுப் பணிகளை துவக்கி முக்கிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.இந்தாண்டு ஆடி பிறக்கும் போதே அமர்க்களமாக தொடர் மழையும் பெய்ததால் விவசாயிகள் ஆர்வமுடன் கடலை, உளுந்து, பயிறு வகைகளை விதைத்தனர். எஸ்.புதுார் ஒன்றியத்தில் கத்தரி, தக்காளி நடவு செய்யப்பட்டது. ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக காற்று அடிக்க வேண்டிய காலத்தில் மழையும், மழை வேண்டிய நேரத்தில் வெயிலும் என பருவ நிலை மாறி வந்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான இடங்களில் பயிர்கள் காயத் தொடங்கியுள்ளன. போர்வெல் தண்ணீர் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் மட்டுமே ஓரளவு வளர்ந்துள்ளது. மானா வாரிப் பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. களை எடுக்க வேண்டிய தருணம் என்றாலும், மண்ணில் ஈரப்பதம் இல்லாமல் அப்பணியையும் தொடர முடியவில்லை.இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும், இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக அனைத்தும் சாவி ஆகிவிடும். இதனால் இந்த ஆண்டின் ஆடிப்பட்டம் ஏமாற்றி நஷ்டத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
20-Aug-2024
19-Aug-2024