மேலும் செய்திகள்
தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
05-Sep-2024
சிவகங்கை: சிவகங்கை நகரில் 15 விநாயகர் சிலைகள் உட்பட மாவட்டம் முழுவதும் 346 சிலைகள் ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில், பொது வெளி மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்த பின்னர் அரசு அறிவித்துள்ள நீர் நிலைகளில் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று விசர்ஜன நிகழ்வு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலத்துக்காக 346 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.சிவகங்கை நகரில் சிவன்கோயில் திடல், காளவாசல்,திருப்புத்துார் சாலை, ஆவரங்காடு, ஜெ.பி. திரையரங்கம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, உழவர் சந்தை, வாரச்சந்தை சாலை, ரயில்நிலையம், கொடிக்காடு, ரயில்வேகேட், இந்திராநகர் பகுதிகளில் சிலைகள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் குணசேகரன், பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், நகர் தலைவர் எம்.ஆர். உதயா, பாலா, சதீஷ் உள்ளிட்ட பா.ஜ.,, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில்59 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிவபுரிபட்டி வயிற்றுப்பிள்ளையார் கோயில், வடக்கு வேளாளர் தெரு பாலமுருகன் பால விநாயகர் கோயில், சுந்தரம் நகர் சுகந்தரு விநாயகர் கோயில், பள்ளங்குண்டு பாலமுருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. செப்.9ம் தேதி மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தெப்பக்குளத்தில் விசர்ஜனம் செய்யப்படும்.
05-Sep-2024