உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு டவுன் பஸ் டயர் பஞ்சர்

அரசு டவுன் பஸ் டயர் பஞ்சர்

சிவகங்கை : மானாமதுரையில் இருந்து சிவகங்கை சென்ற அரசு டவுன் பஸ் நேற்று காலை கீழக்கண்டனிஅருகே பஞ்சர் ஆனதால்பயணிகள் அவதிப்பட்டனர்.மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை 8:25 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு டவுன் பஸ் சிவகங்கை வந்தது. பஸ்சை சிவகங்கை டிரைவர் நாகேந்திரன் இயக்கினார். நடத்துனராக காளிமுத்து செயல்பட்டார். பஸ்சில் மானாமதுரை பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்களும், சிவகங்கைக்கு செல்லக்கூடிய அரசு பணியாளர்களும் பயணித்தனர். பஸ் கீழக்கண்டனி அருகே செல்லும்போது பஞ்சராகி டயர் கிழிந்தது. சுதாரித்த டிரைவர் நாகேந்திரன் பஸ்சை ரோட்டின் ஓரமாக நிறுத்தினார். பயணிகள் 15 நிமிடம்காத்திருந்து மாற்று பஸ்சில் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை