பள்ளியில் நெல் கொள்முதல் மையம் வழக்கறிஞர் கமிஷனர் ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவந்திடல் பரதன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:முதுவந்திடலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இதன் மைதானத்தை ஆக்கிரமித்து நுகர்பொருள் வாணிப கழக அனுமதியுடன் நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல் கதிர் துாசிகள், கதிரடிக்கும் இயந்திரத்திலிருந்து வெளியேறும் ஒலி மாசால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கழிப்பறை அருகே மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கழிப்பறையை மாணவிகள் பயன்படுத்த முடியவில்லை. கள ஆய்வு, மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தாமல் கொள்முதல் மையத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். பள்ளி மைதானத்தில் மையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: வழக்கறிஞர் ஹரிகரனை கமிஷனராக நியமிக்கிறோம். அவர் ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.