உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செண்பகம்பேட்டை டோல்கேட்டை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

செண்பகம்பேட்டை டோல்கேட்டை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை; சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டை டோல்கேட்டை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிறுகூடல்பட்டி இளங்கோ தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டை நான்குவழிச்சாலையில் டோல்கேட் உள்ளது. அதிலிருந்து 23 கி.மீ.,துாரத்தில் லெம்பலக்குடியில் மற்றொரு டோல்கேட் அமைந்துள்ளது. இதில் விதிமீறல் உள்ளது. செண்பகம்பேட்டை டோல்கேட்டை அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ.,) உத்தரவிட வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.தனி நீதிபதி,'லெம்பலக்குடி டோல்கேட்டை மாற்ற வேண்டும். செண்பகம்பேட்டை டோல்கேட் தொடர்ந்து செயல்பட வேண்டும்,' என 2020ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், எம்.ஜோதிராமன் அமர்வு: லெம்பலக்குடியில் 2011, செண்பகம்பேட்டையில் 2017 ல் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி ஒரு டோல்கேட் அமைந்துள்ள பகுதியிலிருந்து 60 கி.மீ.,துாரத்திற்குள் மற்றொரு டோல்கேட் அமைக்கக்கூடாது. லெம்பலக்குடியிலிருந்து 23 கி.மீ.,துாரத்தில் செண்பகம்பேட்டை டோல்கேட் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. டோல்கேட்டை எங்கு நிறுவ வேண்டும் என்பதை என்.எச்.ஏ.ஐ.,தான் முடிவு செய்ய வேண்டும். அதன் முடிவு சட்டம், விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.லெம்பலக்குடியில் முந்தைய காலகட்டத்தில் டோல்கேட் அமைந்தது என்பதில் சர்ச்சை இல்லை. செண்பகம்பேட்டையில் டோல்கேட் அமைத்தது சட்டத்திற்கு புறம்பானது. அதை அகற்ற வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை