மேலும் செய்திகள்
வீடுகளில் நுாலகம் அமைத்த பள்ளி மாணவர்கள்
07-Mar-2025
சிவகங்கை: சிவகங்கையில் வீட்டில் 1000 புத்தகங்கள், ஓலைச்சுவடிகளை பாதுகாத்து மாணவர்களிடம் வாசிப்பு திறனை அதிகரித்த அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளருக்கு கலெக்டர் ஆஷா அஜித் 'சொந்த நுாலக விருதை' வழங்கினார். மக்களிடம் வாசிப்பு திறனை அதிகரிக்க தங்கள்வீடுகளில் நுாலகம் வைத்து மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தும்நபர்களுக்கு 'சொந்த நுாலக விருதை' அரசு வழங்குகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சொந்த நுாலகம் வைத்திருப்போரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மாவட்ட அளவில் 54 பேர் கலெக்டருக்கு விண்ணப்பித்தனர். ஆய்வு செய்ய மாவட்ட நுாலக அலுவலர், எழுத்தாளர்கள்குழுவை கலெக்டர் நியமித்தார். இக்குழுவினர் ஆய்வு செய்து கலெக்டரிடம் அறிக்கை சமர்பித்தனர்.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் ஆர்.தங்கமுனியாண்டி, தனது வீட்டை நுாலகமாக மாற்றி, அதில் 1000 புத்தகங்கள் மற்றும்100 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வருகிறார். மாவட்ட அளவில் சிறந்த சொந்த நுாலக பராமரிப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு நேற்று கலெக்டர் அரசு சார்பில் நுாலகத்துறை மூலம் வழங்கப்பட்ட 'சொந்த நுாலகத்திற்கான விருது' மற்றும் சான்றிதழை வழங்கினார். வாசிப்பு திறனை நேசித்து நுாலகம்
கவுரவ விரிவுரையாளர் ஆர்.தங்கமுனியாண்டி கூறியதாவது:இன்றைய மாணவர்களிடம் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்வதன் மூலமே, அவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்கும் நோக்கிலும், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு வாசிப்பு திறன் மிக மிக அவசியம் என்பதால், வீட்டில் சொந்தமாக நுாலகம் அமைத்து பராமரித்து வருகிறேன். அவற்றை போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், கல்லுாரி மாணவர்களின் பயன்பாட்டிற்கு விட்டுள்ளேன் என்றார்.
07-Mar-2025