மேலும் செய்திகள்
சென்னை ஏர்போர்ட்டில் 18 லட்சம் பேர் பயணம்
30-Aug-2024
காரைக்குடி: பள்ளத்துார் பேரூராட்சியில் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டடம் மற்றும் ஆய்வகத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.கலெக்டர் ஆஷா அஜித் தலைமையேற்றார். ஆய்வகத்திற்கு அரசின் பங்களிப்புத் தொகையாக ரூ.6 லட்சமும், மக்களின் பங்களிப்பாக வள்ளியம்மை சார்பில் ரூ.3 லட்சமும், புதிய கட்டடத்திற்கு அரசின் பங்களிப்புத் தொகையாக ரூ. 11 லட்சமும், அருண் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ரூ.6 லட்சமும், மற்ற பணிகளுக்கு ஜவகர் சார்பில் ரூ.1.50 லட்சமும், தோட்டப் பராமரிப்பிற்கு நாச்சியப்பன் சார்பில் ரூ.1 லட்சமும் நன்கொடையாக வழங்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. என்றார்.நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் பிரியதர்ஷினி, பேரூராட்சி தலைவர் சாந்தி, தொழிலதிபர்கள் படிக்காசு, சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
30-Aug-2024