உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மதுராந்தகம் கோயிலுக்கு சிங்கம்புணரியில் தேர்வடம்

மதுராந்தகம் கோயிலுக்கு சிங்கம்புணரியில் தேர்வடம்

சிங்கம்புணரி: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலுக்கு சிங்கம்புணரியில் தேர்வடம் தயாரிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேர் திருவிழாவுக்காக பிரம்மாண்ட தேர்வடம் தயாரிக்க சிங்கம்புணரியில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. தேர்வட உற்பத்தியாளர் கோகிலா நல்லதம்பி மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட கயறு தொழிலாளர்கள் ஒரு வாரம் விரதம் இருந்து 17 இஞ்ச் அகலம், 700 அடி நீளம் கொண்ட வடத்தை தயாரித்தனர். நேற்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வடம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கோகிலா தெரிவிக்கையில், சிங்கம்புணரியில் பரம்பரையாக கயறு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு கோயில்களுக்கும் இங்கிருந்து தேர்வடம் தயாரித்து அனுப்புகிறோம். சிறியது முதல் பெரியது வரை பல அளவுகளில் வடம் தயாரிக்கிறோம். ஒரு வாரத்துக்கு மேல் விரதம் இருந்து பக்தியுடன் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை