சிவகங்கையில் மிதமான மழை
சிவகங்கை; சிவகங்கையில் வானிலை அறிவிப்பு படி நேற்று மிதமான மழை பெய்தது.சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவ மழையை நம்பி நெல் நடவு செய்த விவசாயிகள் அறுவடை பணியை துவக்கி நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் மார்ச் 11 மற்றும் 12 ம் தேதி காலை வரை மிதமான (மஞ்சள் அலர்ட்) மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நேற்று காலை 6:30 மணிக்கு துாறல் மழை பெய்தது.இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் சிவகங்கையில் பலத்த மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை - 14 மானாமதுரை - 3, திருப்புவனம் - 2.3, காரைக்குடி - 10, தேவகோட்டை - 26, காளையார்கோவில் - 19.60 மி.மீ., மழை பெய்தது.