உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி அழகப்பா பல்கலையில் தேசிய தர நிர்ணயக் குழு ஆய்வு

காரைக்குடி அழகப்பா பல்கலையில் தேசிய தர நிர்ணயக் குழு ஆய்வு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் தேசிய தர நிர்ணயக் குழு சார்பில் ஆய்வு நடந்து வருகிறது.பல்கலை.,யின் தரத்தை மதிப்பீடு செய்யும் தேசிய தர நிர்ணயக் குழு (நாக் கமிட்டி) சார்பில் காரைக்குடி அழகப்பா பல்கலையில் நேற்று ஆய்வு தொடங்கியது. நவ. 8ம் தேதி வரை இக்குழு ஆய்வு மேற்கொள்கிறது.டில்லி இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை துணைவேந்தர் கிரன் ஹசாரிகா தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.அழகப்பா பல்கலை துணை வேந்தர் க.ரவி 2018 முதல் 2023 வரையிலான 5 கல்வியாண்டுகளில் பல்கலையின் சாதனை குறித்த விரிவான அறிக்கையை வழங்கினார். முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் நிர்வாகப் பணியாளர்களுடன் இக்குழு கலந்துரையாட உள்ளது. பல்கலை பதிவாளர் செந்தில் ராஜன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சேகர், ராஜாராம், ஜெயகாந்தன், தேர்வாணையர் ஜோதி பாசு, உள்தர மதிப்பீட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அலமேலு உள்ளிட்ட பலர் இக்குழுவினை வரவேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி