உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செயல்படாத சுகாதார வளாகம்

செயல்படாத சுகாதார வளாகம்

சிங்கம்புணரி, ஜூலை 10- சிங்கம்புணரி ஒன்றிய த்தில் 30 ஊராட்சிகளிலும் 70 க்கும் மேற்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டது. தனி நபர் வீடுகளில் கழிப்பறை இல்லாதவர்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சில வருடங்களாக பல கிராமங்களில் உள்ள கழிப்பறைகள் செயல்படவில்லை. போர்வெல்லில் தண்ணீர் இல்லாமலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் வீடுகளில் கழிப்பறை இல்லாத மக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு முறையான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அனைத்து சுகாதார வளாகங்களையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை