உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் மூடை மோசடி: 2 பேர் கைது

நெல் மூடை மோசடி: 2 பேர் கைது

சிவகங்கை : இளையான்குடி சாத்தனி அருகே சோழஊரணி கிராமத்தை சேர்ந்தவர் சவரியப்பன் மகன் குழந்தைசாமி 51. நெல் மூடைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.பிப்.20ல் ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்புள்ள 354 நெல் மூடைகளை லாரியில் ஏற்றி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சாமிநாதனுக்கு அனுப்பியுள்ளார்.லாரியை தென்காசி மாவட்டம் வேலாயுதபுரத்தை சேர்ந்த கங்காசுப்பிரமணியன் 35 ஓட்டியுள்ளார். கங்காசுப்பிரமணியன் நெல் மூடைகளை சாமிநாதனிடம் வழங்காமல் லாரி உரிமையாளர் தென்காசி மாவட்டம் குருங்காவனம் மதுகுட்டியிடம் 43 ஒப்படைத்தார்.நெல் அனுப்பியதற்கான பணம் கிடைக்காததால் நேற்று முன்தினம் குழந்தைசாமி இளையான்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் கங்கா சுப்பிரமணியன் மற்றும் லாரி உரிமையாளர் மதுகுட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை