மேலும் செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு
17-Aug-2024
சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு
01-Sep-2024
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் , ஆவணி சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு பிரதோஷ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில், சொக்கலிங்கபுரம் செண்பகவல்லி அம்மன் சமேத அழகிய சோழீஸ்வரர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.*இளையான்குடி அருகே குறிச்சி கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றது. மானாமதுரை, இளையான்குடி பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.*மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆவணி சனி மஹா பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
17-Aug-2024
01-Sep-2024