முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு பதிவு
சிவகங்கை,: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவர்கள் உரிய சான்றுடன் இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற, தகுதியுள்ளவர்கள் உரிய சான்றுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆண் வாரிசு இல்லை என்ற சான்று, வருவாய் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குள்), ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்ததற்கான சான்று, இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இரு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்று, ஜாதி, குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை வயது சான்று, குடும்ப போட்டோ, தாய், தந்தையின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளுடன் அரசின் இ- சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.