உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில்களில் சிவராத்திரி கொண்டாட்டம்

கோயில்களில் சிவராத்திரி கொண்டாட்டம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடந்தது. சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பிப். 2௬ம் தேதி மாலை 6:00 மணி முதல் நேற்று காலை வரை யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சித்தர் முத்துவடுகநாதர் வாழ்ந்த கோயில் வீட்டில் சிறப்பு வழிபாடு நடந்தது.சித்தர் வழிபட்ட வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டு வராகி அந்தாதி பாடப்பட்டது. சின்னையா ஆத்தா கோயிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது. முளைப்பாரி படைத்து அம்மனை வழிபட்டனர். மணப்பட்டி நாய்க்குட்டியான் கோயிலில் பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது.இரவு முழுவதும் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். முறையூர் மீனாட்சி சொக்கநாதர், பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர், சதுர்வேத மங்கலம் ருத்ர கோடீஸ்வரர், சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது. முழுவீரன் தெரு மந்திரி அப்பச்சி கோயிலில் சுவாமிக்கு வாழைப்பழங்கள் படையல் போட்டு வழிபாடு நடத்தப்பட்டது.திருப்புத்துார்: திருத்தளிநாதர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடந்த நான்கு கால பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்றனர்.திருத்தளிநாதர் கோயிலில் இரவு 8:30 மணிக்கு முதற்கால பூஜைக்கு பின் மூலவருக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிவனடியார்களின் திருவாசகம்,சிவபுராணம் பஜனை துவங்கியது. இரவு 10:30 மணிக்கு திருநாகேஸ்வரருக்கு அபிேஷகம் நடந்தது. இரண்டாம் கால பூஜை அதிகாலை 12:30 மணிக்கு நடந்தது. 1:00 மணிக்கு அகத்தியர் லிங்கத்திற்கு பக்தர்களால் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தது. அதிகாலை 3:30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும்,. அதிகாலை 5:30 மணிக்கு நான்காம் கால பூஜைகளும் நடந்தன.தேவகோட்டை: தேவகோட்டையில் சிவராத்திரியை முன்னிட்டு சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், கலங்காது கண்ட விநாயகர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில், திருக்கயிலேஸ்வரர் கோவில், அருணகிரி பட்டினம் முத்துமாரியம்மன் கோவில், ஆதிசங்கரர் கோவில் கவுரி கைலாசநாதர், உட்பட நகரில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. தாழையூர் உசிலாவுடைய அய்யனார் கூத்தாடி முத்து பெரியநாயகி அம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு நான்கு கால பூஜை நடைபெற்றது. வெள்ளி, தங்க அங்கி சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு சுவாமி , அம்பாள் மற்றும் கருப்பர் வேலிற்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை