உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரி, காரைக்குடியில் உயர்வுக்கு படி முகாம் மாற்றம்

சிங்கம்புணரி, காரைக்குடியில் உயர்வுக்கு படி முகாம் மாற்றம்

சிவகங்கை, : சிங்கம்புணரி, காரைக்குடியில் நடைபெற இருந்த நான் முதல்வன் திட்ட உயர்வுக்கு படி முகாம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிங்கம்புணரி, காரைக்குடியில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நாளில் நிர்வாக காரணங்களால், உயர்வுக்கு படி முகாம் நடைபெறாது. இதற்கு மாற்றாக செப்., 19 அன்று சிங்கம்புணரி யாதவா திருமண மண்டபத்திலும், செப்., 25 ல் காரைக்குடி அழகப்பா பல்கலை அரங்கிலும் உயர்வுக்கு படி முகாம் அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடந்த இரு கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்லாமல் உள்ள மாணவர்கள், உயர்கல்வியில் சேர ஏற்பாடு செய்துதரப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை