மேலும் செய்திகள்
ரூ.16.21 கோடி கல்விக்கடன்
27-Feb-2025
சிவகங்கை: கல்லுாரி படிக்கும் மாணவர்களுக்கு சிவகங்கையில் நாளை சிறப்பு கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி கல்வி கூட்டரங்கில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இக்கல்வி கடன் முகாம் நடைபெறும். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்ப நகல், மாணவர், பெற்றோரின் 2 போட்டோ, வங்கி ஜாயின்ட் அக்கவுண்ட் புத்தக நகல், இருப்பிட, வருமான, ஜாதி சான்று நகல், பான், ஆதார் கார்டு நகல், கல்லுாரியில் இருந்து பெற்ற உண்மை சான்று, கல்வி கட்டண விபரம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று, கவுன்சிலிங் மூலம் சேர்ந்த ஆணை நகலுடன் முகாமில் பங்கேற்கலாம். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கடன் ஆணை வழங்கப்படும்.
27-Feb-2025