மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.இளையாத்தங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலர் குணாளன் முன்னிலை வகித்தார். தாளாளர் பழனியப்பன் வரவேற்றார். தாசில்தார் மாணிக்கவாசகம் பங்கேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் அழகு மணிகண்டன், இளையாத்தங்குடி ஆர்.ஐ. பாக்கியலட்சுமி, வி.ஏ.ஓ. தர்மராஜ், உடற்கல்வி ஆசிரியர் வாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதல்வர் பழனியப்பன் நன்றி கூறினார்.
27-Jan-2025