மேலும் செய்திகள்
2 போலீஸ் எஸ்.ஐ.,க்கு அண்ணாதுரை பதக்கம்
26-Aug-2024
காரைக்குடி: மாநில அளவிலான ரோல் பால் போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.கோவையில் மாநில அளவில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல் கோவை திருச்சி செங்கல்பட்டு உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 16 அணிகள் விளையாடின. இதில் சிவகங்கை மாவட்ட அணி இறுதிப் போட்டியில் கோவை அணியை எதிர்த்து போட்டியிட்டது. போட்டியில் 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. மாவட்ட அணியில் விளையாடிய தருண், தீபேஸ், வெற்றிவேல், ஸ்ரீராம், பிரனேஷ், ரோகித் வேல், ரோஷன், சுசில், அபிஷேக் தீபன் காஞ்சி, ரித்திஷ், ஜஸ்வந்த் பெருமாள் உள்ளிட்ட வீரர்களை பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
26-Aug-2024