உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மகா சிவராத்திரி விழாவிற்காக தயாராகும் குலதெய்வ கோயில்

மகா சிவராத்திரி விழாவிற்காக தயாராகும் குலதெய்வ கோயில்

இளையான்குடி : இளையான்குடியில் மகா சிவராத்திரி விழாவிற்காக குலதெய்வக் கோயில்களை குடி மக்கள் தயார் படுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவன் கோயில்களில் நான்கு கால பூஜை நடைபெறும். பூஜையின் போது சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற உள்ளன.கிராம பகுதிகளில் உள்ள தங்களது குலதெய்வ கோயில்களில் குடிமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பூஜைகளை நடத்த உள்ளனர். இளையான்குடி அருகே அரியாண்டிபுரம் வடக்கு குடியிருப்பில் உள்ள பெரிய கருப்பணசாமி, மீனாள் கோயிலில் நிர்வாகிகள் சிவராத்திரி விழாவிற்காக மராமத்து பணிகளை செய்து வருகின்றனர். அன்றைய தினம் இரவு முழுவதும் சுவாமிகளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை