பயனற்று கிடக்கும் காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை
காரைக்குடி: காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சூரக்குடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பயனற்றுக்கிடக்கும் பாரம்பரிய கட்டடத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தற்போது அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சூரக்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த கட்டடம் பயன்பாட்டின்றி கிடக்கிறது. அருகில் உள்ள சிறிய கட்டடத்தில் வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. பரிசோதனை மட்டுமே செய்து, நோயாளிகளை புதிய மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். மருத்துவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 85 ஆண்டுகளை கடந்த இந்த கட்டடத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது, இந்த கட்டடத்தில் தொடர்ந்து மருத்துவமனை இயங்கும் விதத்தில் தாலுகா மருத்துவமனை அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளோம், என்றனர்.