உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை சாலையில் மரக்கன்று நடும் பணி

மானாமதுரை சாலையில் மரக்கன்று நடும் பணி

மானாமதுரை: மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரையில் கருவேல மரங்களை அகற்றி நிழல் தரும் மரக்கன்றுகளை வனத்துறையினர் நட்டு வருகின்றனர். வனத்துறை ஊழியர்கள்கூறியதாவது: மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலை கடந்த 6 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட போது இப்பகுதியில் இருந்த நிழல் தரும் மரங்கள் அகற்றப்பட்டன. நான்கு வழி சாலை அருகிலும் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன. இதனை அகற்றும் வகையிலும் நெடுஞ்சாலைகளில் நிழல் தரும் மரங்கள் நடும் பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் தற்போது பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ