உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத தேவூரணி பூங்கா

பராமரிப்பில்லாத தேவூரணி பூங்கா

இளையான்குடி: இளையான்குடி பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அருகே உள்ள தேவூரணி பூங்கா மராமத்து செய்யப்படாமல் உள்ளதினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அருகே உள்ள தேவூரணி மற்றும் பூங்கா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் மராமத்து செய்யப்பட்டு ஊரணியை சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டது.மேலும் பூங்காவும் இதனோடு சேர்த்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இளையான்குடி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சிக்கு சென்று வந்தனர். ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இப்பூங்காவிற்கு சென்று தங்களது பொழுதையும் கழித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஊரணி, பூங்கா மற்றும் நடைபாதை ஆகியவற்றை சரியாக பராமரிக்காத காரணத்தினால் எங்கு பார்த்தாலும் குப்பைகளாகவும்,செடி கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி